Irul Vaakku!

von: Devibala

Pustaka Digital Media Pvt Ltd, 2019

ISBN: 9783967242379 , 86 Seiten

Format: ePUB

Kopierschutz: Wasserzeichen

Mac OSX,Windows PC für alle DRM-fähigen eReader Apple iPad, Android Tablet PC's Apple iPod touch, iPhone und Android Smartphones

Preis: 3,49 EUR

eBook anfordern eBook anfordern

Mehr zum Inhalt

Irul Vaakku!


 

http://www.pustaka.co.in

இருள் வாக்கு!

Irul Vaakku!

Author:

தேவிபாலா

Devibala

For more books

http://www.pustaka.co.in/home/author/devibala-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

1

“அத்தான் வரப் போறார் இன்னிக்கு!”

லாவண்யா அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து விட்டாள். உறக்கம் பிடிக்கவில்லை. நிலை கொள்ளவில்லை.

நாலு வருடங்களுக்கு முன்னால் மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க அயல் நாடு சென்ற சம்பத் இன்று படிப்பை முடித்துக் கொண்டு திரும்புகிறான்.

அத்தையின் ஒரே பிள்ளை சம்பத்.

சிறு வயதில் கணவனை இழந்த அத்தை, ஆதரவற்று மகனுடன் தணித்து நின்ற போது அவரை அணைத்துக் கொண்டவர் அத்தையின் ஒரே தம்பியான லாவண்யாவின் அப்பாதான்.

லாவண்யாவின் அம்மா இதய நோயாளி. லாவண்யாவின் எட்டாவது வயதில் அம்மா மரித்து விட, லாவண்யாவுக்கு தாயாக இருந்து வளர்த்தது அத்தைதான்.

அந்த அத்தையின் ஒரே பிள்ளை தான் சம்பத்.

சிறு வயது முதலே ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள், தெருவிலுள்ள ஈ, காக்கை பாக்கியில்லாமல் அவர்களை ஜோடியாக இணைத்து பேசி விட்டது, லாவண்யாவின் பத்தாவது வயது முதலே.

அப்பாகூட ஓரோர் சமயம் அதை ஆதரிக்கவில்லை.

லாவண்யா தன் பதின் மூன்றாவது வயதில் பூத்த போது --

“அடுத்தது கல்யாணம்தானா நடேசன்?”

“கல்யாணமா?”

“ஆமா பொண்ணு வயசுக்கு வந்தாச்சு, மாப்ளை ரெடியா இருக்கே வீட்ல?”

“சம்பத் இப்பத்தான் ப்ளஸ் டூ படிக்கிறான். சின்னக் குழந்தை அவன்.”

"ஆனாலும் அவன் தானே உங்க மாப்ளை?”

“ஆமாம்னு சொல்லிட்டுப் போயேண்டா தம்பீ!”

“அக்கா... நான் வேண்டாம்னா சொல்றேன். ஆனாலும் நாமமட்டும் நினைச்சா போதுமா? தெய்வம் நினைக்க வேண்டாமா? ரெண்டும் வளரத் தொடங்கியாச்சு ஆபத்தான பருவம் ஆரம்பம். இனி ஆசைகளை வளர்க்க வேண்டாம். நடக்கற நேரத்துல தானா நடக்கட்டும்.”

அப்பா பேசும் போதெல்லாம் முற்றுப் புள்ளி வைத்து விடுவார்.

ஆனாலும் லாவண்யா தினம் தினம் சம்பத் மேலுள்ள ஆசைகளை வளர்க்கத் தான் செய்தாள்.

அவனும் அவளிடம் அன்பாகத்தான் இருந்தான்.

ப்ளஸ் டூ முடித்ததும் டாக்டருக்குப் படிக்க ஆசைப்பட்டான் அதை அம்மாவிடம் சொன்னான்.

“தபாரு தம்பீ! இதெல்லாம் பெரிய ஆசை. நீ அப்பா இல்லாத பிள்ளை. நம்மால முடியாது ராஜா!”

நடேசன் சகல ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கி விட்டார்.

சம்பத்தின் நல்ல மதிப்பெண்களும், நடேசனின் செல்வாக்கு. பணபலம் எல்லாமாக அவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. அவன் மருத்துவப் படிப்பை முடித்து விட்டான்.

சம்பத் முதலாவதாகத் தேறி தங்க மெடல் மாணவனாக வெளிப்பட்ட போது, அயல்நாட்டுக்கு உயர் படிப்புக்குச் செல்ல வாய்ப்பு வந்தது.

அம்மாவுக்கு விருப்பமில்லை.

மாமாதான் சந்தோஷமாக பாதிச் செலவை ஏற்றுக் கொண்டு அவனை அனுப்பி வைத்தார்.

நாலு வருட காலம்...

இந்த நாலு வருடங்களில் எம்.பி.ஏ முடித்து விட்டாள் லாவண்யா. அப்பாவின் கம்பெனி நிர்வாகங்களை இப்போதெல்லாம் முழுமையாக கவனிப்பது அவள் தான்.

சம்பத்துக்கு சகல வசதிகளோடு நர்சிங் ஹோம் ஒன்று கட்டவும் திட்டமிருந்தது.

இதோ இன்று சம்பத் வருகிறான்.

லாவண்யா நாலு மணிக்கே எழுந்து குளித்து, ஈரத் தலையை ஆற்றுக் கட்டாக அமைத்துக் கொண்டு எளிமையான கைத்தறிச் சேலையில் ஒரு தேவதை போலிருந்தாள்.

அவளது பால்கோவா நிறத்துக்கு மாதுளம்பூ நிற சேலை அம்சமாகப் பொருந்தியிருந்தது.

"அத்தே காபி!”

அத்தை விழித்துக் கொண்டார்.

வீட்டில் வேலைக்காரர்கள், சமையல் மாமி என்று சகலரும் இருந்தாலும் அத்தை, அப்பாவுக்கு காலைக் காபி லாவண்யா தான்.

"இப்படி வந்து உட்காருடா தங்கம்!”

“என்னத்தே?”

அவளை அருகில் இருத்தி தலையைத் தடவிக் கொடுத்தார் அத்தை.

“சம்பத் வரப்போற சந்தோஷமா? அவள் எனக்குப் பிள்ளையா பிறந்ததைவிட, நீ மருமகளா ஆகப் போறது தான் பெருமைடா கண்ணு. அவன் வந்ததும், முதல் வேலை முகூர்த்தம் குறிக்கறது தான். இனியும்...